அடித்துக் கொலை செய்யப்பட்ட தந்தை... தப்பிக்க நினைக்கும் மகன்..?

coimbatore panaimarathur

கோவை பனைமரத்தூர் விநாயகர் கோவிலை ஒட்டியுள்ளது குட்டிப் பையன் என்கிற முருகனின் வீடு. முருகனின் மகன் 22 வயதான திவாகர் இருசக்கர வாகனங்களைத் திருடியதாக அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறைக்குள் சென்றிருக்கிறான்.

'தான் எந்தப் பிரச்சனைக்காகவும் காவல்நிலையமே சென்றதில்லை, உன்னால் தினந்தோறும் காவல்நிலையம் சென்று நிற்க வேண்டியுள்ளது' என்று மகன் திவாகரின் செயல்பாடுகளை முருகன் அடிக்கடி கண்டிப்பாராம். தன்னைக்கண்டிப்பதைப் பிடிக்காத திவாகர், முருகனை அவ்வப்போது அடித்து விடுவாராம். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவும் திவாகரை முருகன் கண்டித்துள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் போதையில் இருந்த திவாகர், தூங்கிக்கொண்டிருந்த முருகனை எழுப்பி தாக்கியதில், முருகன் தலையில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதில் பதறிப்போன திவாகர், தனது தந்தை குடித்துவிட்டு இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது தடுமாறி கீழே விழுந்து இறந்துவிட்டார் என அக்கம் பக்கத்தில் கூறியுள்ளார். இதனை நம்பாத அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்து திவாகரின் செயல்பாடுகளைக் கூறியுள்ளனர்.

போலீசார் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Coimbatore incident Police investigation
இதையும் படியுங்கள்
Subscribe