Advertisment

மனைவி, மகள்களுக்கு விஷம் கொடுத்த கணவர்... உயிருக்குப் போராடும் இளைய மகள்... 

ggggg

Advertisment

மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கு விஷம்கொடுத்து, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட தொழிலாளியால், கோவையில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. இதில் விஷமருந்திய இளைய மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரம் ரெப்ரஸ்சி காலனி அமர் ஜோதி நகர் பகுதியில் குடியிருப்பவர் சிவமுருகன் (45). இவருக்கு வைரமணி என்ற மனைவி (40), யுவஸ்ரீ (21), ஹேமலதா (19) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2008 கோவையில் வந்து தங்கி வேலைசெய்து வந்துள்ளார். சிவமுருகன் பால் வியாபாரம் செய்து வந்தார். கரோனா ஊரடங்குக்கு பின்னர் தன் தொழிலை தொடர்ந்து செய்யமடியாமல் வேலையை விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

Advertisment

இதனால் அதிகப்படியான கடன் தொல்லைக்கு ஆளான நிலையில், காந்திபுரம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தினமும் கடன் கொடுத்தவர்கள் ஃபோன் மூலமாகவும் நேராகவும் இவருக்குக் கொடுத்த கடனைக் கேட்டுள்ளனர்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்தவர், நேற்று இரவு வீட்டின் அருகே கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தன் கடனை திருப்பித் தருமாறுகேட்டுள்ளனர். வீட்டில் மனைவி தன் இரு பெண்கள் முன்னர் கடனைக் கேட்டு அவமானப் படுத்தியதால், இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு வாழைப்பழத்தில் விஷத்தை வைத்த சிவமுருகன், மனைவி மற்றும்இரண்டு பெண் குழந்தைகளுக்குசாப்பிடகொடுத்துள்ளார். பிறகுஅதைத் தானும் சாப்பிட்டுள்ளார்.

cnc

மேலும், அவருக்குக் கடன் கொடுக்க வேண்டியவர்கள் கடன் கேட்டு தொந்தரவு செய்தவர்கள் என சில விவரங்களை ஒரு நோட்டில் எழுதி வைத்துள்ளார். அதிகாலையில், அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் கதவைத் உடைத்துப் பார்க்கும்போது,குடும்பத்தில் 3 நபர்களும் உயரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.கடைசிப் பெண் ஹேமலதா மட்டும், உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் சொல்லிவிட்டு, ஹேமலதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து மூன்று பேரின்உடல்களையும் வடவள்ளி காவல்தறையினர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் விஷமருந்தி இறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

problem money Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe