சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில், கோவை மேட்டுப்பாளையம் நீடூர் கிராமத்தில் தீண்டாமையின் எண்ணத்தில் கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்து பலியான 17 பேர் பலியான சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்திற்கு நியாயம் கேட்டுப் போராடிய போராளிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி பொய் வழக்கும் போட்டுள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தியும், பலியான குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பன்னீர் தலைமை வகித்தார்.

coimbatore mettupalayam wall collapesd 17 peoples incident strike

கடலூர் மாவட்ட தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் நடராஜ், விவசாய பிரிவு மாநில செயலாளர் சிவமணி, சிதம்பரம் நகர தலைவர் வீர கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மாவட்ட துணை செயலாளர் செல்வமணி மாவட்ட செய்தி தொடர்பாளர் திருவரசு நகர செயலாளர் ஆதிமூலம், சரித்திரன் உள்ளிட்ட கட்சியினர் 100- க்கும் மேற்பட்டவர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

Coimbatore cuddalore lok janasakthi party incident mettupalayam police strike Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe