Skip to main content

கோவை மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில் தடம்புரண்டது!!

Published on 07/07/2019 | Edited on 07/07/2019

கோவை மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. 


நாகை மயிலாடுதுறை அருகே ஜன சதாப்தி விரைவு ரயில் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை ரயில்வே தடத்திற்கு மாறிய போது தண்டவாளத்தை விட்டு ரயில் என்ஜின் விலகியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் எந்தவித அசம்பாவிதமும், உயிர் சேதமும் ஏற்படாமல் ரயிலானது தடம்புரண்டுள்ளது.

train


கோவையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி செல்லும் ஜனசதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை அருகே வந்த பிறகு நான்காவது பிளாட்பார்மில் செல்வதற்காக ரயிலை ஓட்டுநர் இயக்கிய போது ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கியுள்ளது. ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிட்டத்தட்ட இந்த ரயிலில் 500க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்திருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கான காரணம்  இன்னும் அறியப்படவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்