கடும் வறட்சியின் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி சூழல் சுற்றுலாப் பகுதியான கோவை குற்றாலம் மூடப்பட்டது. மேலும், பருவமழை பொய்த்துப் போனதால், நீடித்த வறட்சி காரணமாக குற்றாலத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றது. இந்த சூழலில் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், கோவை குற்றாலம் உள்பட பல்வேறு நீர்நிலைகளைத் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் வரத் தொடங்கின. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது.

Advertisment

Coimbatore kutralam opens after 108 days

இந்த சூழலைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் பகுதி சீரமைப்பு மற்றும் சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், தென்மேற்கு பருவமழையினால் கோவை குற்றாலம் ஓரளவிற்கு நீர்வரத்தைப் பெற்றுள்ளதோடு, சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், 108 நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் இன்று (ஜுலை 12) திறக்கப்பட இருப்பதாக கோவை மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.