/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Specs.jpg)
கோவையைச்சேர்ந்த மதன் எனும் இளைஞர் உலக அமைதிக்காக விழிப்புணர்வை ஏற்படுத்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருசக்கர வாகன பயணத்தை கோவையில் துவக்கியுள்ளார்
.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த மதன் கடந்த பிப்ரவரி மாதம் இருசக்கர வாகன பயண விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏழாயிரத்து மூன்னூறு கிலோ மீட்டர் இந்தியா எல்லையான இமயமலை வரை பயணித்த நிலையில் இன்று உலக அமைதிக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சுமார் எட்டாயிரம் கிலோ மீட்டர் பயணத்தை இருபத்திரண்டு நாட்களில் நிறைவு செய்யும் வகையில் கோவையில் இருந்து இன்று தனது இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை துவக்கி உள்ளார். கோவையில் இருந்து காஷ்மீர் செல்லும் இவர் பின்னர் கன்னியாகுமரி அடைந்து பின்னர் மீண்டும் கோவையை அடைய உள்ளார். மதனின் பயணத்தை அவரது நண்பர்களும் பொதுமக்களும் வாழ்த்தி துவக்கி வைத்தனர். மேலும் இந்தியன் ரெக்கார்டு ஆப் புக்கில் இடம் பெரும் வகையில் இந்த பயணத்தை முடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)