Skip to main content

வாக்கு எண்ணும் மையத்தில் கோவை சரக டிஐஜி ஆய்வு

 

Coimbatore Inventory DIG Inspection at Vote Counting Centre

 

காங்கிரஸ் எம்எல்ஏவான திருமகன் ஈவெரா மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. வரும் மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி விஜயகுமார் சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

 

வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி உட்பட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !