கோவை இன்டர்சிட்டி பாதி வழியில் நிறுத்தம்; பயணிகள் அவதி

Coimbatore intercity stops midway; passengers suffer

மின்கம்பி உடைந்து சேதமடைந்ததால் கோவை செல்லும் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை செல்லும் ரயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில்உள்ள மோசூர் என்ற இடத்தில் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. ரயிலின் உயர் மின்னழுத்த உராய்வு கம்பி திடீரென உடைந்ததால் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து ரயிலின் உயர் மின்னழுத்த உராய்வு கம்பியை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சீரமைப்பு பணி காரணமாக பெங்களூர், திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Chennai kovai Train
இதையும் படியுங்கள்
Subscribe