
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் உள்ளிட்ட எந்த நிவாரணமும் வழங்கக் கூடாதென உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 1998- ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் சிறைத்தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிசா மொய்தீன் உள்ளிட்ட 16 பேர் கருணை அடிப்படையில் சில நிவாரணங்களை வழங்கவும் , குறைந்தபட்சம் ஜாமீன் வழங்கக் கோரிக்கை விடுத்தும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், "சிறையில் உள்ள அனைவரும் தங்களது பழைய சித்தாந்தத்தில் உள்ளனர். சிறையில் கூட அவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. சிறையில் அலைபேசிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, அவர்களுக்கு ஜாமீன் உள்ளிட்ட எந்த சலுகைகளையும் வழங்கக்கூடாது. மேலும், 16 பேர் தொடர்ந்த ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளது.