coimbatore

கோவை பனைமரத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு வாலிபரின் சடலம் கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, வாலிபரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் எனத் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ரமேஷ் திருநங்கைகளுடன் பழகி வந்ததால், திருநங்கைகள் சிலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் கவின் என்பவர், இந்தக் கொலையை தான் செய்ததாக செல்வபுரம் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.