கோவை சிங்காநல்லூர் பகுதியில் குமார் என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெயிண்டர் வேலை செய்து வரும் இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர் மகள் ஒரு தனியார் பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறார். குமார் ரெண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது, அங்கு டிரைவராக வேலை பார்த்த அருண் குமார்(35) என்பவரோடு நண்பராக பழகி வந்தனர்.

Advertisment

Coimbatore incident - pocso act - Youth arrested

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதன் காரணமாக குமார் வீட்டுக்கு வருவது அருண்குமாருக்கு வழக்கமாகிவிட்டது. ஆனால் அவர் குமாரின் மகளை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து வந்துள்ளார். கடந்த 4-3-2020 அன்று வீட்டில் குமாரும், அவரது மனைவியும் இல்லாத போது, அங்கு வந்த அருண்குமார் அவர்களது மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த மாணவி அருண்குமாரிடம் இருந்து தப்பி வீட்டை வீட்டு வெளியே வந்துவிட்டார்.

இச்சம்பவம் குறித்து வெளியே சொல்லக்கூடாது என்று அவர் மிரட்டியதால் பள்ளி மாணவி பயந்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இதை அருண்குமார் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அந்தப்பெண் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளார். இதன்காரணமாக வெகுநாட்களாக அந்த மாணவி மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்துள்ளார்.

Advertisment

இதை கவனித்து பெற்றோர் கேட்ட போது, அருண்குமார் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக கூறினார். இதனால் கோபம் கொண்ட குமார், தனது மகளை அழைத்துக்கொண்டு அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் அருண்குமாரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.