
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது யுஏபிஏ (உபா) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் 5 பேருக்கும் நவம்பர் எட்டாம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திடீர் திடீரென என்.ஐ.ஏ அதிகாரிகள் சிலர் வீடுகளில் சோதனை நடத்துவதாகவும், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வப்போதுசெய்திகள் வெளியாகும். ஆனால் இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ கிளை அலுவலகத்திலும் கேரள மாநிலம் கொச்சினில் உள்ள என்.ஐ.ஏ கிளை அலுவலகத்திலும் தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் இருந்து வந்தது.
இந்நிலையில்கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கை சென்னை என்.ஐ.ஏ கிளைமுதன் முதலாக வழக்குப்பதிவு செய்திருக்கிறது. சென்னை புரசைவாக்கத்தில் ஏற்கனவே என்.ஐ.ஏ அலுவலகம் இருந்தாலும் அதற்கு வழக்குப்பதிவு செய்யவும், முதல் தகவல் அறிக்கை கொடுக்கவும் அதிகாரம் இல்லாமல் இருந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் வழக்குப் பதிவு செய்யவும், முதல் தகவல் அறிக்கை தயார் செய்யும் அதிகாரமும்வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை என்.ஐ.ஏ அலுவலகத்தில்முதல் முறையாககோவை கார் வெடிப்பு சம்பவம்வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)