Advertisment

விவசாயியை தாக்க வந்த விஷ பாம்பு... குறுக்கே நின்று விசுவாசத்தைக் காட்டிய வளர்ப்பு நாய்கள்... வைரல் வீடியோ...!

கோவை அருகே தோட்டத்தில் விவசாயியை விஷ பாம்பு தாக்க வந்த போது, அவர் வளர்த்த மூன்று நாய்கள் அந்த பாம்புடன் சண்டையிட்டு, தனது உரிமையாளரை காப்பாற்றிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

coimbatore incident - dogs-snake

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் அருகேயுள்ள பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். அப்பகுதியில் அவர் வீட்டுடன் சேர்த்து விவசாய தோட்டம் உள்ளது. இந்நிலையில் இன்று காலை தோட்டத்திற்கு மாடுகளுக்கு தீவணம் வைக்க தனது நண்பருடன் சென்றுள்ளார்.

அப்போது அங்கு சுமார் 6 அடி கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக வந்துள்ளது. இதனை பார்த்து ராமலிங்கம் மற்றும் அவருடன் வந்த நண்பர் அச்சமடைந்துள்ளனர் . ஆனால் ராமலிங்கத்துடன் வந்த 3 வளர்ப்பு நாய்கள், பாம்புடன் சண்டையிட்டு தனது எஜமானை காப்பாற்றியுள்ளது.

Advertisment

coimbatore incident - dogs killed a snake

சண்டையிட்டது மட்டும் இல்லாமல் 3 நாய்களும் சேர்ந்து பாம்பை கடித்து குதறி கொன்றது. பாம்புடன் சண்டையிட்டு வளர்ப்பு நாய்கள் உரிமையாளரை காப்பாற்றும் இந்த காட்சிகளை ராமலிங்கத்தின் நண்பர் தனது செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

Coimbatore Dogs Farmers snake
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe