Advertisment

சிறுமியைக் கர்ப்பமாக்கிய இளைஞன்... திருமணம் செய்ய முயன்ற போது கைது...

coimbatore

கோவை உக்கடத்தில் உள்ள சைல்டு லைன் எண்ணிற்கு கடந்த 17ஆம் தேதி ஒரு ஃபோன் கால் வந்தது. அதில் பேசிய அடையாளம் இல்லாத நபர், காரமடை பெள்ளாதி கிராமத்தில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. உடனே தடுங்கள் எனக் கூறியுள்ளார். இதையடுத்து சைல்டு லைன் அலுவலர்கள் விசாரணை நடத்த்தினர்.

Advertisment

சம்மந்தப்பட்ட சிறுமியை விசாரித்ததில், தனது வீட்டருகே வசிக்கும் சிவலிங்கம் (26) என்ற இளைஞன் தான்,வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி தனிமையில் என்னோடு பேசி வந்தான். ஒரு நாள் என்னை திருமணம் செய்துக்கொள்வதாகக் கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்தான் எனத் தெரிவித்திருக்கிறார் அந்தச் சிறுமி.

Advertisment

மேலும், பரிசோதனையின் போது சிறுமி கர்ப்பமானதை அறிந்த வீட்டில் உள்ளவர்கள், கர்ப்பத்திற்கு யார் காரணம்எனக் கேட்டபோது, சிவலிங்கம் என்று கூறியதாகவும் சிறுமி சொல்லியிருக்கிறாள்.

சிறுமி 3 மாத கர்ப்பமானதையடுத்து, சிவலிங்கத்துடன் 21ஆம் தேதி திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் ஏற்பாடு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக சைல்டு லைன் அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ பிரிவின் கீழ் சிவலிங்கத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe