கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சமயத்தில்,கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் பூ மற்றும் பழசந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக,சென்னையில் கோயம்பேட்டில் செயல்பட்டுவரும் பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாகசிஎம்டிஏ உறுப்பினர் செயலர், கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் கோயம்பேட்டில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெறும். சில்லறை விற்பனையை மாநகராட்சி மைதானங்களில்செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.