விவசாயியை மது விலக்கு போலீசார் தாக்கியதாக கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

கோவையை அடுத்த முத்து கவுண்டன் புதூரை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அவருக்கு சொந்தமான அங்காளம்மன் கோவில் தோட்டம் என அழைக்கப்படும். அவரது தென்னந்தோப்பில் தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்கி உள்ளார். இந்த நிலையில்அதிகாலையில், அந்த தோட்டத்துக்கு சென்ற மதுவிலக்கு போலீசார் தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளை உடைத்துள்ளனர்.

மேலும் தென்னம்பாளைகளையும் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் மூன்றரை லட்சம் மதிப்பு கொண்ட 7 தென்னை மரங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து, நாரயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க அமைப்பினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த விவசாயிகள், போலீசாரை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். இந்த தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானம் செய்தனர்.

coimbatore farmers and police issue

பின்னர் விவசாயிகள், காவல்துறை மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். இது குறித்து விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.எஸ்.பாபு பேசுகையில், தொடர்ந்து இதுபோன்று நீராபானம் இறக்கும் விவசாயிகள் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா உள்ளது போல நீராபானம் இருக்க தமிழக அரசும் அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், விரைவில் தமிழக அரசு மனுவை ஏற்று அனுமதி அளிக்கும் என தாங்கள் நம்புவதாக நம்பிக்கை தெரிவித்தார். இதுபோன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டால், நாங்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Coimbatore Farmers police Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe