Advertisment

நாளை மறுநாள் கோவை செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

coimbatore district visit cm palanisamy

Advertisment

கரோனா தடுப்புப் பணி, அத்திக்கடவு அவிநாசி திட்டம் பற்றி ஆலோசிக்க முதல்வர் பழனிசாமி, நாளை மறுநாள் (25/06/2020) கோவை செல்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் பழனிசாமி 25-06-2020 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனா நோய்த் தடுப்புப் பணிகள், மற்றும் அத்திக்கடவு- அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். மேலும், அத்திக்கடவு- அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்யவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 26-06-2020 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை (Barrage) கட்டும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். மேலும், காவேரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை (Barrage) பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cm palanisamy Coimbatore coronavirus Tamilnadu visit
இதையும் படியுங்கள்
Subscribe