ADVERTISEMENT

கரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் ஆய்வு! (படங்கள்)

03:56 PM May 30, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கோவை மாவட்டம், இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிபிஇ கிட் அணிந்து கரோனா வார்டில் ஆய்வு செய்தார். அப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து சிகிச்சைத் தொடர்பாக முதல்வர் கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் கரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை பிபிஇ கிட் அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!

கரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT