கோவை குற்றாலத்துக்கு நாளை (14.12.2021)முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘தொடர் மழை காரணமாக கடந்த அக்டோபர் 4ஆம் தேதிமுதல் கோவை குற்றாலத்துக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் நீரானது இயல்பு நிலையை எட்டியுள்ளதால், வரும் செவ்வாய்க்கிழமை (14.12.2021) முதல் கரோனா நோய்த் தொற்று தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.