Coimbatore court incident; The police shot two

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்தியபாண்டியன் என்பவர் முன்விரோதம் காரணமாக நவ இந்தியா பகுதியில் உள்ள இளநீர் கடையில் 6 பேர் கொண்ட கும்பலால் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டப்பட்டுகொலை செய்யப்பட்டார்.

Advertisment

அதே நாளில் கோவை கீரநத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்ற இளைஞரும்கோவை நீதிமன்ற வளாகத்தில் முன்விரோதம் காரணமாக 4 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கோகுலின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்துகுற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இருவரை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில்தொடர்புடையவர்களில் 5 பேரை செல்போன் சிக்னலை வைத்து கோத்தகிரியில் காவலர்கள் பிடித்த நிலையில்,தப்பியோடியகவுதம் மற்றும் ஜோஷ்வா ஆகியோரை காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர். மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் அவர்கள் இருவரும் சிக்கினர். தப்பி ஓட முயன்ற அவர்களை காவலர்கள் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.

தற்போது காயம்பட்ட இருவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.