Coimbatore Corporation has ordered draw  Tamil epics flyover pillars

Advertisment

கோவையில் திரும்பிய திசையெல்லாம் காணப்படும் போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிப்பதற்காகமாநகராட்சி அதிகாரிகள் கையாண்ட யுக்திகள்,அரசியல்வாதிகளைமட்டுமின்றிபொதுமக்களையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில்போஸ்டர் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காந்திபுரம், 100 அடி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், உள்ளூர் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் எனப் போட்டிப் போட்டுக்கொண்டு திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்களை ஒட்டி விளம்பரம் செய்து வருகின்றன.

இதையடுத்து, பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதையும் மீறிபொது இடங்களிலும்மேம்பாலத்தூண்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால்நகரின் தூய்மைக்கும் அழகுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகபொதுமக்கள் ஆதங்கப்பட்டு வந்தனர்.

Advertisment

இத்தகைய சூழலில்இதற்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலத்தூண்களில் ஓவியங்களை வரைவதற்கான முயற்சிமேற்கொள்ளப்பட்டது. அதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொது இடங்களில்சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட தமிழின் ஐம்பெருங்காப்பியங்களை வரைய வேண்டும் என கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்டமாககோவை காந்திபுரம் சாலையில் உள்ள மேம்பாலத்தூண்களில் இருந்த போஸ்டர்களை அகற்றிவிட்டுசிலப்பதிகாரக் காப்பியத்தில் வரும் காட்சிகள்தத்ரூபமாக வரையப்பட்டு வருகின்றன. சுமார் நூறு தூண்களில் வரையப்படும் இந்த ஓவியங்களால்கோவை நகரம் அழகு பெறுவது மட்டுமல்லாமல்,இன்றைய தலைமுறையினர்நமது தமிழ் காப்பியங்களை ஓவிய வடிவில் அறியக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள்தற்போது கோவை மக்களிடையே அதிகம் பகிரப்படுகிறது.