coimbatore

கரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் கோவை இப்போது தான் சிவப்புலிருந்து ஆரஞ்சுக்கு மாறி இருக்கிறது.கூடிய விரைவில் ஆரஞ்சு நிறத்தில் இருந்து, அது பச்சை மண்டலமாக மாறி விடும் என மக்கள் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

இந்த நிலையில் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் வெளியில் சுற்றித் திரிந்த இளைஞர்களை, சூலூர் காவல் நிலைய போலீசார் பிடித்தனர்.நீங்க இனிமே இப்படி வெளிய சுத்தவே கூடாது என சொல்லிய போலீசார், சாலையோரத்தில் ஒரு மணிக்கு மேல சுத்த மாட்டோம்,வீட்டிலேயே இருப்போம்,தனிமையில் இருப்போம் எனகும்மி பாட்டு பாடி ஆட சொன்னர்.

Advertisment

இந்த நூதன தண்டனைவழங்கிய போலீசாரிடம், நாங்க ரொம்ப தப்பு பண்ணிட்டோம் சார். இனிமே நாங்க அரசாங்கம் உத்தரவுக்கு கட்டுப் படுவோம் என உணர்ச்சி பொங்கச் சொல்லி கிளம்பினர்.கும்மி அடிக்கும் இளைஞர்கள் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.