Skip to main content

ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்ட்!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 


கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் பணத்தை கொடுத்து ஆவின் வாடிக்கையாளர் அட்டையை பெற்றுள்ளார். அதை தொடர்ந்து பொருட்கள் வாங்குவதற்காக அன்பழகன் வடவள்ளி ஆவின் பூத்திற்கு சென்றுள்ளார். அப்போது தனது ஆவின் வாடிக்கையாளர் அட்டையை, ஆவின் பூத்தின் அதிகாரிகளிடம் கொடுத்தார். அதனை பெற்று கொண்ட அதிகாரிகள் வாடிக்கையாளரின் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் வைத்திருந்த பைலில் இவரது பெயர் இல்லை. அதை அன்பழகனிடம் அதிகாரிகள் கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அன்பழகன் இழப்பீடு கேட்டு கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

coimbatore consumer court warrant to Managing Director of Awin!


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019- ஆம் ஆண்டு ஜூலையில் இழப்பீடு வழங்க ஆவின் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் ஆவின் நிறுவனம் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு தராததால், ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோவை மாவட்டம் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள் தான் வரும்” - ஜியோ பேபி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
joe baby speech at pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் நேற்று இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, தரணி ராஜேந்திரன், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.  

அப்போது, ஜியோ பேபி அவர் இயக்கிய  தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் குறித்து பேசுகையில், “வித்தியாசமான ஜானரில் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். முதலில் இப்படம் எல்லா பிரதான ஓடிடி தளங்களிலும் நிராகரிக்கப்பட்டது. சாட்டிலைட் சேனல்களிலும் நிராகரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்தோம். எப்படி வெளிக்கொண்டு வருவதென தெரியவில்லை. யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. அதன் பிறகு நீ ஸ்ட்ரீம் என்ற புதிய தளம் உதவினார்கள். அதனால்தான் படம் வெளிவந்தது. படம் வந்த பிறகு பெரும்பாலும் பெண்களால்தான் இப்படம் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியது.  அதன் பிறகு நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தது. இந்தப் படத்தை நிராகரித்த அனைவர்களும் ஆண்கள் தான். 

joe baby speech at pk rosy film festival

தொடர்ந்து பெண்ணியம் சம்மந்தபட்ட படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் அவ்வுளவுதான். அதில் பெண்ணியவாதம் மாதிரியான படங்களும் இருக்கும். சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள்தான் வரும். அதை நான் பண்ணவில்லையென்றாலும் வேறு யாராவது பண்ணுவார்கள்” என்றார்.