Advertisment

காதலன் வீட்டிற்கு வந்துவிட்டு வெளியே சென்றதும் கோவை கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை 

கோவை குணியமுத்தூர் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய அனிதா, கோவை, க. க. சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், பி.காம், முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தன்னுடன் அதே கல்லூரியில் படிக்கும் ஜாபர் என்ற மாணவனை காதலித்து வந்ததாக தெரிகிறது.

Advertisment

cll

நேற்று மாணவியின் பெற்றோர்கள் வெளியே சென்றிருந்ததை அறிந்த ஜாபர், நேற்று மாலையில் அனிதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். நீண்ட நேரமாக இருவரும் ஏதோ வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விசாரித்ததும் அங்கிருந்து ஜாபர் சென்றுள்ளார்.

Advertisment

பின்னர் வெளியே சென்ற பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது, மகள் அனிதா அவரது அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்து, உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார்கள். அங்கு அனிதாவை பரிசோதித்த மருத்துவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார்கள். அங்கு அனிதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அனிதா இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்கள்.

j

இந்த தகவல் அறிந்த குணியமுத்தூர் காவல் நிலைய போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

படிக்கும் வயதில் காதல்வயப்பட்டு தற்கொலை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருவதால் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளார்கள். மேலும் இது போன்ற தற்கொலைகள் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.

Coimbatore college student suicide
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe