Advertisment

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த இளைஞன் கைது...

ri

Advertisment

காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தப்பியோடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோவை பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்,இவரது மகள் ஐஸ்வர்யா, அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரத்தீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது.

ஐஸ்வர்யாவின் பெற்றோர் ஐஸ்வர்யாவையும், ரத்தீஷ் ஆகிய இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் ஐஸ்வர்யா இந்த மூன்று மாதங்களாக ரத்தீஷை சந்திப்பதை தவிர்த்து வந்திருக்கிறார். தன்னுடன் பேசுமாறு ஐஸ்வர்யாவை பலமுறை ரத்தீஷ் வலியுறுத்தி வந்துள்ளார். ஐஸ்வர்யா இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால் பலமுறை ரத்தீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

இந்தநிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் ஐஸ்வர்யாவைத் தேடிச் சென்ற ரத்தீஷ், தன்னிடம் தொடர்ந்து பேசுமாறும் காதலிக்குமாறும் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ஐஸ்வர்யாவின் தந்தை சக்திவேல் அங்கு வந்துள்ளார். அப்போது ஐஸ்வர்யாவை ரத்தீஷ் கத்தியால் நான்கு இடங்களில் குத்தியதாகவும், அதனைத் தடுக்க வந்த அவரது தந்தை சக்திவேலையும் கத்தியால் குத்தியதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன.

காயமடைந்த ஐஸ்வர்யா மற்றும் சக்திவேல் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சக்திவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ்வர்யா மற்றும் ரத்தீஷ் ஆகிய இரு குடும்பத்தினரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ரத்தீஷை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் போலீசார் கைது செய்தனர்.

arrest Police investigation incident college student Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe