coimbatore

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆட்டோ ஒட்டுநர் வினோத் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

Advertisment

கோனாம்பாளையத்தை சேர்ந்த வினோத். இவரது மனைவி பெயர் மங்கள். இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு ஆட்டோவில் வந்தார். பின் திடீரென ஆட்டோவில் இருந்து இறங்கி தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.

Advertisment

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அதை தடுத்து அவர் தண்ணீர் ஊற்றினர். அப்போது வினோத் கூறுகையில், "குடும்ப தகராறு காரணமாக நான் தீ குளிக்க முடிவு செய்தேன். குடும்பத்தார் யாரும் எனக்கு துணை இல்லை என்றார்.

திடீரென கலெக்டர் அலுவலகத்தில் ஒருவர் தீ குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் காவல்துறை உடனடியாக அவரைப் பிடித்து அவர் மேல் தண்ணீரை ஊற்றி விசாரணைக்கு பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Advertisment