கோவையில் 7 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் பெண் அதிகாரியை நியமித்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் அனந்தநாயகி சிறுமி கொலை வழக்கை விசாரிக்க உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், தூக்குத்தண்டனையும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு என சிறுமியின் தாயார் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.