கோவை பன்னிமடை பகுதியில் 2019- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 வயது பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கை கோவை மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தால் வழக்கின் தீர்ப்பு நாளை (27.12.2019) வெளியாகவுள்ளது.

Advertisment

coimbatore child incident again appeal new case at mahila court

இந்நிலையில் சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது டிஎன்ஏ சோதனையில் அம்பலமாகியுள்ளது. சந்தோஷ்குமார் மட்டுமே வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கை முடித்த நிலையில், சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது மகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி சிறுமியின் தாயார் கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.