Advertisment

"தீர்ப்பை வரவேற்கிறோம்... ஆனால்..." கோவை சிறுமி வழக்கு தீர்ப்பு குறித்து சிறுமியின் தாயார்...

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 1- ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி, கடந்த மார்ச் 25- ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனார். அடுத்த நாளான 26- ஆம் தேதி வீட்டின் எதிரே உள்ள வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியை பிடிக்க வலியுறுத்தி கோவையில் பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.

Advertisment

coimbatore case verdict

பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியின் வீட்டிற்கு எதிரே மனைவியை பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற நபரை 31- ஆம் தேதி கைது செய்தனர்.

Advertisment

இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா , சாட்சி விசாரணைகளின் அடிப்படையில் சந்தோஷ்குமார் குற்றவாளி என அறிவித்தார். இதைத்தொடர்ந்து பிற்பகலில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா குற்றவாளிக்கான தண்டனை விபரத்தை அறிவித்தார்.

இதில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை, 7 ஆண்டு சிறை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுமதிக்க வேண்டும். மேலும், ரூ.2000 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த குழந்தையின் தாயார் நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல் செய்த மனுவில் சந்தோஷ் குமார் ஒருவர் மற்றும் குற்றவாளி அல்ல. மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக டிஎன்ஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் அந்த குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அந்த மனுமீது மேல் விசாரணை நடத்தவும் நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்பை வரவேற்று மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமையில் மாதர் சங்க நிர்வாகிகள் தீர்ப்பை வாசிக்கப்பட்டவுடன் தீர்ப்பை வரவேற்று நீதிமன்ற வளாகத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், சிறுமியின் தாயார் வனிதா கூறுகையில்;- இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும், அதேசமயம், மற்றொரு குற்றவாளியும் இருப்பதாகவும், அவனும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.மேலும், மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி கூறுகையில், தூக்கு தண்டனையை நாங்கள் ஏற்பதில்லை. அதேசமயம் இதுபோன்ற குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்க வேண்டும் எனவே, இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும், மேலும் பல குற்றவாளிகள் உள்ளனர் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe