Skip to main content

கோவை கார் வெடிப்பு சம்பவம்...என்.ஐ.ஏ வழக்கு; நெல்லையில் ஒருவரிடம் விசாரணை

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

 Coimbatore car incident... NIA case; Interrogation with someone in Nellai

 

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது யுஏபிஏ (உபா) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் 5 பேருக்கும் நவம்பர் எட்டாம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லையில் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது உசேன் லெப்பை (லெப்பை என்பது மதகுருவிற்கான பெயர் என்று கூறப்படுகிறது) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையில் 'மதராஸா' என்ற பள்ளியை நடத்தி வந்துள்ளார். எனவே அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் பெயரில் நெல்லை மாநகர போலீசார், 50க்கும் மேற்பட்ட காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்