Coimbatore car explosion incident; 5 people taken in person and NIA investigation

Advertisment

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் முபீன் என்ற நபர் உயிரிழந்த நிலையில் முபீனின் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் முகமது ரியாஸ், முகமது நவாப் இஸ்மாயில், முகமது அசாருதீன், ஃபிரோஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 5 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் சென்னையில் இருந்து கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு கடந்த சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர். அதனையடுத்து ஐந்து பேரும் உக்கடம், கோட்டைமேடு, புல்லுக்காடு, ஜி எம் நகர் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.