Advertisment

தொழிலதிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி; பல் மருத்துவர் கைது

coimbatore businessman durkey apple buying incident involved dentist 

தொழிலதிபரிடம் நூதன முறையில் பணம் பறித்துசினிமாதயாரிப்பு நிறுவனம்ஒன்றைத்தொடங்க முயன்ற சம்பவம்பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கோவை மாவட்டம்சீரநாயக்கன்பாளையத்தைச்சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). ஏற்றுமதி, இறக்குமதி தொழிலதிபரான இவருக்குசென்னை ராயப்பேட்டைபகுதியைச்சேர்ந்த பல் மருத்துவரானஅரவிந்த் (வயது 33) என்பவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்நிலையில் தொழிலதிபரான ரமேஷுக்கு தொழிலில் உதவிடும் வகையில்துருக்கியில் இருந்துகுறைந்த விலைக்கு கண்டெய்னர்மூலம் ஆப்பிள்களை வாங்கித்தருவதாகஅரவிந்த்கூறியுள்ளார். இதனை நம்பிய ரமேஷும் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் அரவிந்த்துக்கு பல்வேறு தவணைகளாக ஒரு கோடியே 24 லட்சம்ரூபாயைக்கொடுத்துள்ளார்.

Advertisment

பணத்தை வாங்கிய அரவிந்த், ரமேஷுக்குகூறியபடிஆப்பிள்களை அனுப்பவில்லை. மேலும் கொடுத்த பணத்தைத்திருப்பிக்கேட்டபோது காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்துபாதிக்கப்பட்ட ரமேஷ் இதுகுறித்துகோவை மாநகர குற்றப்பிரிவுபோலீசாரிடம்புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தபோலீசார்அரவிந்தை கைது செய்ததுடன், இந்த மோசடி சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தஅரவிந்தின் மனைவி துர்காபிரியாமீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின்தொடர் விசாரணையில் மோசடி செய்தபணத்தைக்கொண்டு அரவிந்த் சினிமா நிறுவனம்ஒன்றைத் தொடங்கி படம் எடுக்க முயன்றதுதெரியவந்தது.

Dentist police covai Coimbatore apple Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe