கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தராக பி. காளிராஜை நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு.
இதையடுத்து பேராசிரியர் பி.காளிராஜ் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து, துணை வேந்தருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்டார். துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பி. காளிராஜ் 31 ஆண்டுகள் பேராசிரியர் பணியில் அனுபவம் வாய்ந்தவர். இவர் தற்போது அண்ணா பல்கலைக்கழத்தில் பயோ- டெக்னாலஜி பிரிவில் பணிப்புரிந்து வருகிறார்.