Advertisment

அரசுக் கல்லூரி கழிவறையில் நெளிந்த பாம்புகள்;அதிர்ச்சி கொடுத்த வீடியோ

Coiled snakes in government college toilets

திருவண்ணாமலையில் அரசு கலைக் கல்லூரியின் கழிவறையில் பாம்பு குட்டிகள் மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

திருவண்ணாமலை செய்யாறில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் சுமார் 8000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பல ஆண்டுகளாக அந்த கல்லூரியின் சுற்றுச்சுவர்களும் கழிவறைகளும் பராமரிக்கப்படாமல் இருந்து வருவதாக புகார்கள் எழுத்து வருகிறது. மேலும் கல்லூரி வளாகத்திலேயே பல இடங்கள் பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கேபுதர்கள் காணப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரியின் கழிவறையில் பாம்பு குட்டிகள் நெளியும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிஉள்ளது. பெண்கள் கழிவறையில் பாம்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் கலைவாணி தெரிவித்துள்ளதோடு கழிவறையை தூய்மைபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இருப்பினும் இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment
snake thiruvannamalai Toilet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe