Skip to main content

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 800 க்கு தென்னங்கன்றுகள் வாங்கி நடவு செய்யும் விவசாயிகள்

Published on 09/03/2019 | Edited on 09/03/2019


 

    கடந்த ஆண்டு நவம்பர் 16ந் தேதி கஜா புயலின் கடுமையான தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. அதிலும் தென்னை, மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், சவுக்கு உள்ளிட்ட அனைத்து மரங்களும் வேரோடு சாய்ந்தது. பல நூறு ஆண்டுகளாக கிராமங்களின் அடையாளமாக நின்ற ஆலமரங்களும் அடியோடு சாய்ந்தது. 
 

இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். கஜா புயலின் தாக்கத்தால் சாய்ந்த தென்னை உள்ளிட்ட மரங்களை இன்னும் அகற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதுடன் முற்றிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இதில் விவசாயிகளை வாழவைத்துக் கொண்டிருந்த தென்னை உள்ளிட்ட மரங்களின் அழிவு விவசாயிகளை நிலைகுழைய செய்துவிட்டது.
 

    இந்த நிலையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சில விவசாயிகள் தங்கள் தோட்டங்களை சுத்தம் செய்து மறு நடவுகளுக்கு தயாராகி வருகின்றனர். அதனால் தென்னங்கன்றுகள், மா, பலா போன்ற கன்றுகளை வெளியூர்களில் இருந்து வாங்கி வருகின்றனர். புயல் பாதிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் ரூ. 50 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்ட தென்னங்கன்றுகள் தற்போது தேவைகள் அதிகமாக இருப்பதால் வெளியூர்களில் இருந்து கீரமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள கன்று வியாபாரிகள் ஒரு தென்னங்கன்று ரூ. 800 முதல் ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். அதே போல மா போன்ற கன்றுகளும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Coconut trees


 

    ரூ. 800 வாங்கப்படும் தென்னங்கன்றுகள் பதியத்திலேயே சுமார் 2 ஆண்டுகள் வரை வளர்க்கப்படுவதால் தோட்டங்களில் நடவு செய்த 3 ஆண்டுகளில் காய்க்க தொடங்கும் என்கின்றனர் வியாபாரிகள். ஆதனால் விவசாயிகள் விலையை பார்க்காமல் கடன் வாங்கி அதிக விலை கொடுத்து தென்னங்கன்றுகளை வாங்கி நடவு செய்து வருகின்றனர். இதே போல பல்வேறு வகையான தென்னங்கன்றுகளுடன் வியாபாரிகள் கிராமங்களில் வந்து செல்கின்றனர்.    
 

    இது குறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறும் போது.. தென்னை, பலா உள்ளிட்ட அனைத்து கன்றுகளும் விவசாயிகளே சொந்தமாக உற்பத்தி செய்து நடவு செய்தால் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் தற்போது அவசரம் கருதி அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதனால் 3 வருடத்தில் காய்க்கும் என்று விசாயாபாரிகள் சொல்வதை விவசாயிகள் நம்பி தென்னங்கன்றுகள் வாங்கி நடவு செய்கிறோம். அவர்கள் சொன்னபடியே காய்த்தால் நல்லது. மேலும் தென்னங்கன்றுகளை நடவு செய்யும் நிலையில் அந்த கன்றுகளை வளர்க்க தொடர்ந்து தடையில்லா மின்சாரம் கிடைத்தால் தான் வளர்க்க முடியும் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புயலின் கோரத்தாண்டவம் இன்னும் விவசாயிகளை விட்டுவைக்கவில்லை... தென்னை மரங்களை வெட்டி அழிக்கும் வேதனை!!!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020
Coconut trees

 

கஜா புயல் தாக்கி இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் விவசாயிகள் மீளவில்லை. மேலும் புயலில் அசைந்து நின்ற தென்னை மரங்களும் காய்க்காததால் தோப்புகளை கண்ணீரோடு வெட்டி அழித்து வருகிறார்கள் விவசாயிகள்.

 

2018 நவம்பர் 16 அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை கஜா புயல் ஆட்டி அசைத்துவிட்டு சென்றது. மரங்கள், கட்டிடங்கள், மின் கம்பங்கள், படகுகள் உடைந்து விழுந்தன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீண்டு எழ முடியாமல் தவித்து கொண்டிருந்த விவசாயிகளுக்கும், எஞ்சியுள்ள தென்னை மரங்களை வைத்து வாழ்க்கையை நகர்த்தி விடலாம் என்று எண்ணி இருந்த விவசாயிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. 

 

புயலில் அசைந்து நின்ற தென்னை மரங்களுக்கு உரம், குப்பை வைத்து வழக்கம் போல பராமரித்தனர். ஆனால் 2 ஆண்டுகளை தொட உள்ள நிலையில் எந்த வளர்ச்சியும் இல்லை. ஒரு பாளை கூட வெளியே வரவில்லை. அதனால் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் பலனில்லை என்ற முடிவில் தாங்கள் நட்டு வளர்த்த தென்னை மரங்களை தாங்களே வெட்டி அழித்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தென்னை விவசாயம் அதிகம். ஆனால் காய்ப்பு இல்லை என்று வெட்டி அழிப்பதும் இந்த பகுதியில்தான் அதிகம். வெட்டப்படும் தென்னை மரங்களை சேலத்திற்கு செங்கல் சூளைகளுக்கு குறைந்த விலைக்கு அள்ளி செல்கிறார்கள். 

 

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறும்போது, தென்னையை பிள்ளை போல வளர்த்து வந்தோம், கஜா புயல் அழித்துவிட்டு போனது. எஞ்சிய தென்னை மரங்கள் எங்களை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில் செலவுகள் செய்து உரம், குப்பை வைத்தும் பலனில்லை. தொடர்ந்து பராமரிக்க வசதியும் இல்லை, தண்ணீரும் இல்லை. அதனால் ரூபாய் 300 செலவு செய்து ஒரு மரத்தை வெட்டி ரூ. 250 க்கு அதாவது 50 ரூபாய் நட்டத்தில் செங்கல் சூளைக்கு கொடுக்கிறோம். புதிதாக நட்ட தென்னங்கன்றுகளையும் வண்டு, பூச்சிகள் தாக்கி அழிக்கிறது. விவசாயிகள் எந்த வகையிலும் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றனர் வேதனையாக. 

 

 

Next Story

வாக்காளர்களுக்கு தென்னங்கன்று கொடுத்த அமமுக வேட்பாளர் கைது!

Published on 25/12/2019 | Edited on 25/12/2019

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல.. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் பணம் வாங்குவதும் குற்றம் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒருபக்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மற்றொரு பக்கம் பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களை நோக்கி சென்று கொண்டு தான் இருக்கிறது. இதைப் பார்த்து தான் மறமடக்கி கிராமத்தில் 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்று இளைஞர்கள் தங்கள் வீட்டு சுவர்களில் எழுதி வைத்துள்ளனர்.

  local body election Voters Coconut trees police


இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியக்குழு உறுப்பினருக்காக அமமுக சார்பில் பிலாவிடுதி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் போட்டியிடுகிறார். அவரது சின்னம் தென்னை மரம் ஆகும். அமமுக வேட்பாளர் ரமேஷின் ஆதரவாளர்கள் நேற்று (24.12.2019) மாலை மயிலன்கோன்பட்டி யாதவர் தெருவில் அவரது சின்னத்தை குறிக்கும் வகையில் தென்னங்கன்றுகளை வாக்காளர்களுக்கு வழங்குவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, அங்கு சென்ற பறக்கும் படை அதிகாரி முருகேசன் தென்னங்கன்றுகளைக் கொடுத்துக் கொண்டிருந்த ஹரிஹரனை பிடித்து கறம்பக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஹரிஹரனிடம் இருந்த 100 தென்னங்கன்றுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் அமமுக வேட்பாளர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, பின்பு சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர்.