தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையில், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, பொன்முடி குழுவினர் நேற்று(28/02/2021) மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும்,அதைத் தொடர்ந்துமனிதநேய மக்கள் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், இன்று (01.03.2021) மதிமுகமற்றும் விசிக கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்என நேற்று திமுகஅறிவித்திருந்த நிலையில், இன்று இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.