தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை அனல் மின்நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''சென்னை அனல் மின்நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை. அனல் மின்நிலைய பதிவேட்டில் உள்ளதற்கும்இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் மட்டும் 2.38 லட்சம் டன்.
நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே இந்தத் தவறில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இந்த மின்துறையில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பதுஆய்வில் தெரியவரும்போதுஉள்ளபடியே கடந்த அதிமுக ஆட்சியை நினைத்து வருத்தப்படுவதா? அல்லது அந்த நிர்வாக திறமையைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு ஒரு மோசமான நிர்வாகம் செயல்பட்டிருக்கிறது'' என்றார்.