Advertisment

டெல்டா வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா? - விவசாயிகள் கடும் எதிர்ப்பு

nn

தமிழகத்தில் 66 இடங்களில் துளையிட்டு நிலக்கரி எடுக்க மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பாணைக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Advertisment

நெல் வயல்களை நிலக்கரி சுரங்கமாக்கினால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையில் வடசேரி, மகாதேவபட்டினம், உள்ளிக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நிலக்கரி எடுக்கமத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத்தகவல்கள் வெளியானதைத்தொடர்ந்து இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisment

குறிச்சிக்கோட்டை, பரமன்கோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூரிலும் நிலக்கரி எடுக்க திட்டம் உள்ளதாகத்தகவல்கள் வெளியாகி உள்ளன.பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய பகுதிகளில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஒரத்தநாடு வட்டத்தில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இன்று மாலை விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Thanjavur delta
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe