ADVERTISEMENT

கூட்டுறவுத் தேர்தல்: பெண்கள் உட்பட 7 நபர்களுக்கு அரிவாள் வெட்டு!

10:31 AM Apr 24, 2018 | rajavel


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மருதங்கநல்லூர் கிராமத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதி கொண்டதில் இரு தரப்பிலும் பெண்கள் உட்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பலத்த காயம் அடைந்தவர்கள் கமுதி, ராமநாதபுரம் மற்றும் மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

ஆணையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சங்த தலைவர் பதவிக்கு மருதங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வன்னிமுத்துவும், தி.மு.க. தரப்பில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகியோரும் தங்களது ஆதரவாளர்களுடன் கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்களுக்காக மனுக்கள் பரிசீலனை ஆணையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இரு தரப்பும் வந்திருந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த வன்னிமுத்து தரப்பினர் தி.மு.க தரப்பை சேர்ந்த தியாகராஜன் தரப்பினர்களை அரிவாள் கத்தி வாள் உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பின்னர் பதிலுக்கு தி.மு.க.தரப்பினர்களும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதினர்.

ADVERTISEMENT

இதில் தி.மு.க. தரப்பை சேர்ந்த தியாகராஜன், முரளி, செல்லையா மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 4 நபர்களுக்கும், அ.தி.மு.க தரப்ரபை சேர்ந்த வன்னிமுத்து மனைவி கதிர்வேல், சரஸ்வதி மற்றும் தனிஸ்கோடி 3 நபர்களுக்கும் தலை கை கால் மார்பு உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்து பலத்த காயமடைந்த இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கட்டுள்ளனர். சம்பவம் குறித்து பேரையூர் போலீசார் இரு தரப்பிலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT