சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள், இதர நகர கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்கள் ஆகியவை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 28.8.2019ம் தேதி வெளியிடப்பட்டது.

Advertisment

மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நவ. 23ம் தேதி போட்டித்தேர்வு நடக்கிறது. இத்தேர்வு, சேலம் கைலாஷ் மகளிர் கல்லூரி, ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடக்கிறது.

Co-operative Bank in Salem assistant exam hall ticket download now

Advertisment

இதர கூட்டுறவு அமைப்புகளில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு நவ. 24ம் தேதி எழுத்துத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வு, ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, ஸ்ரீகணேஷ் கலை அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடக்கிறது.

போட்டித்தேர்வு விண்ணப்பித்தோருக்கான ஹால் டிக்கெட் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான இணையதள முகவரி: http://www.slmdrb.in/ ஆகும். அதிலிருந்து தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டித்தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து முழுவீச்சில் நடந்து வருகிறது.