/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jewel-loan-1.jpg)
சிதம்பரம் முத்தையா தொழில்நுட்ப கல்லூரி எதிரேயுள்ள சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தில் நகைக் கடன் வைத்தவர்களில் தள்ளுபடி செய்யப்படாதவர்கள் பட்டியலை வெளியிட்டனர்.
தமிழக அரசாணையின் படி கூட்டுறவுச் சங்கத்தில் தள்ளுபடி செய்யப்படாதவர்கள் பட்டியலைச் சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் வெளியிட்டார். மேலும் நகை அடகுவைத்தவர்கள் விபரங்களை அறியும் வகையில் சங்க கட்டிடத்தின் வாயிலில் பட்டியலை ஒட்டி வைத்துள்ளார்கள். இதனை பார்த்து அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்று கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் சிதம்பரம் தலைமை அலுவலகத்தில் 684 பேரும், காட்டுமன்னார்குடி கிளை அலுவலகத்தில் 954 பேரும் என மொத்தம் 1638 நகை கடன் தள்ளுபடி இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)