publive-image

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு- செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய வந்த அறநிலையத்துறைக் குழுவுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று (07/06/2022) மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக்கோயில் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மடியிலே கனமில்லை என்றால், வழியிலே பயமில்லை என்பார்கள். எந்த விதமான பிரச்சனை இல்லை என்றால், ஆய்வு செய்ய வருபவர்களுக்கு ஒத்துழைப்பதுதான் மனுநீதி, மனுதர்மம்.

Advertisment

உரிய சட்டத்தின்படி வந்திருக்கும் புகார்களின் அறநிலையத்துறையின் குழுவினர் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்கள். சட்டத்தை மீறி எந்த விதமான செயலிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறோம். ஆய்வுக்கு மறுப்பு என்று செய்திகள் வெளி வருகின்றனர்; இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி ஆய்வு மேற்கொள்ளும். முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Advertisment

இதனிடையே, அறநிலையத்துறைக் கேள்விகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்களது வழக்கறிஞர் மூலம் இன்று (07/06/2022) மாலை 04.00 மணிக்கு பதிலளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது