Co-op registrar dismissal! Action with 5 days to retirement

Advertisment

கூட்டுறவுத்துறை பெண் சார்பதிவாளர் மீதானமுறைகேடு புகார்கள் காரணமாக பணி ஓய்வுக்கு 5 நாள்கள் உள்ள நிலையில் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

சேலம் கூட்டுறவுத்துறை பொது விநியோகத்திட்டத்தில் பிரேமா என்பவர் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர், வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். கூட்டுறவுத்துறையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இவர் மீது வணிகக் குற்றப்புலனாய்வுத்துறையில் வழக்குகள் விசாரணையில் உள்ளன.

விசாரணை நிலுவையில் இருப்பதால் அவர் பணி ஓய்வு பெறுவதற்கு காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பணியிடைநீக்கம் செய்து கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

பணி ஓய்வு பெற இன்னும் 5 நாள்கள் உள்ள நிலையில் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.