
தமிழகத்தில் சில தினங்களாக பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், மழை முன்னெச்சரிக்கை காரணமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில் இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கு பெற உள்ளனர்.
Follow Us