Skip to main content

“உயரிய சிந்தனையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

The CM of Tamil Nadu is acting with high thinking sas minister MRK PaneerSelvam

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லால்புரம் ஊராட்சியில் காந்தியடிகளின் பிறந்த நாளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

 

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஊராட்சியில் செய்த பணிகள் விளக்கி கூறப்பட்டது. டெங்கு விழிப்புணர்வு, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஷபானா அஞ்ஜூம், லால்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், “லால்புரம் ஊராட்சியில் 1958 வீடுகளில் 1946 வீட்டில் கழிவறை கட்டப்பட்டுள்ளது என்பது மிகவும் பாராட்டக்கூடியது. இந்த ஊராட்சியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா ஊராட்சியாக மாற்ற வேண்டும். மேலும் நெகிழி இல்லா கிராமமாக உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கிராமங்களை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் உயரிய சிந்தனையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்” என பேசினார்.

 

The CM of Tamil Nadu is acting with high thinking sas minister MRK PaneerSelvam

 

முன்னதாக இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி உரையில், “கிராமப்புறம் மூலமாகத்தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது. எல்லாரும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. மக்களாட்சியின் மகத்தான அமைப்பான கிராம சபை கூட்டம் ஆக்கப்பூர்வமான கருத்து பரிமாற்ற காலமாக அமைந்திட வேண்டும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது” - முதல்வர்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Right of expression issue in Parliament 

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 22 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா உரையாற்றும்போது, தந்தை பெரியாரின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். அப்போது பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தந்தை பெரியாரின் பெயர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் தந்தை பெரியாரின் பெயரை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக் காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.

மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி. சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம். மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும், எப்போதும், எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம். அனைவரும் பயன்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Chief Minister M.K. Stalin's letter

இலங்கைக் கடற்படையினரால் கடந்த 9 ஆம் தேதி (09.12.2023) தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோல தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (11-12-2023) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,  “IND-TN-06-MM- 7675 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும், IND-PY-PK-MM-1499 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்களும், 9-12-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அதோடு, IND-TN-10-MM-558 என்ற பதிவெண் கொண்ட மற்றொரு மீன்பிடிப் படகு இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது, நமது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.