Advertisment

‘வீரா’ வாகனத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (08.09.2023) சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான ‘வீரா’ (VEERA - Vehicle for Extrication in Emergency Rescue and Accidents) அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனத்தின் பயன்பாட்டினைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் காவல்துறையினரின் செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார்.

Advertisment

சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் திட்டத்தின் ஒரு அங்கமாக, சாலை விபத்துக்களில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களின் உயிரைக் காப்பதற்கு, ஒரு தனித்துவமான மற்றும் முன்னோடியான முயற்சியாக மீட்பு வாகனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது, சாலை விபத்தில் சிக்கியமற்றும் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் பாதிக்கப்பட்ட நபர்களை, தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற காவல் குழுவினர் உதவியுடன் மீட்பதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும்.

Advertisment

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோட், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Chennai car police DGP Chennai Police mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe