திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில்பங்கேற்றுவருகிறார். இந்த நிலையில் காலை உணவுத்திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம்அரசுப்பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
காலைஉணவுவிரிவாக்கத்திட்டத்தைத்தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். சாப்பிடும் போது, அருகே இருந்த மாணவர்களிடம், “நான் யார் தெரியுமா?இது யாருடைய ஊர்?என்னபடிக்கிறீங்க? நல்லாபடிக்கிறீங்களா? எல்லாரும் சரியானநேரத்திற்குப்பள்ளிக்கு வருகிறீர்களா?” என்றவிவரங்களையும் கேட்டறிந்தார்.