“தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது” - முதல்வர் ஸ்டாலின்

cm stalin said Information technology being misused some political forces spread rumours

தகவல் தொழில்நுட்பத்தை சில அரசியல் சக்திகள் தவறாகப் பயன்படுத்தி வதந்திகளை பரப்பி வருகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைசார்பில் பிரிட்ஜ் கருத்தரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “தொழில்நுட்பம் ஒரு குடையின் கீழ் வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத்திகழ்கிறது. ஐ.டிதுறையில் முதல் இடத்தை பிடிக்க திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இளைய தலைமுறை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதலில் உருவாக்கியது திமுக அரசு தான்.

1998 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்திற்கு என தனி துறையை உருவாக்கி அதில் தமிழகம் முன்னேறியிருப்பதற்கு காரணம் கலைஞர்தான். தகவல் தொழில்நுட்பத் துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடி மாநிலமாகவிளங்குகிறது. உலகத்தில் ஒரு மூலையில்நடக்கும் நிகழ்வு மற்றொரு மூலைக்கு உடனே கிடைத்து விடுகிறது.

தனிமனிதப் பாதுகாப்பை உறுதி செய்ய தொழில்நுட்ப வளர்ச்சி இன்றியமையாதது. தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தரவுகள் தான் இந்த காலத்தின் முக்கிய எரிபொருள்.அதற்காக புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. வதந்திகளைப் பரப்பிசட்டம் ஒழுங்கைக் கெடுக்க சில அரசியல் சக்திகள் தகவல் தொழில்நுட்பத்தைத்தவறாகப் பயன்படுத்துகின்றனர்.” என்றார்.

informationtechnology
இதையும் படியுங்கள்
Subscribe