Advertisment

“சி.ஆர்.பி.எஃப் தேர்வை தமிழில் நடத்த வேண்டும்” - உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Cm stalin letter to Home Minister to conduct CRPF exam in Tamil

சி.ஆர்.பி.எஃப் பணிக்கான கணினித் தேர்வைத்தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் நடந்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

மத்திய உள்துறை அமைச்சகம் சி.ஆர்.பி.எஃப் பணிக்கானஅறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும் அந்தத்தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் தான் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத்தேர்வில் இந்தி தெரிந்தால்தான் 25 மதிப்பெண்களுக்கு விடையளிக்கும் சூழலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் சி.ஆர்.பி.எஃப்பணிக்கான கணினித் தேர்வைத்தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் நடந்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், சி.ஆர்.பி.எஃப் பணிக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் சி.ஆர்.பி.எஃப். கணினித்தேர்வை நடத்த வேண்டும். மொத்தமுள்ள 9,212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன. அப்படி இருக்கும் நிலையில் தமிழக இளைஞர்கள் எப்படித்தேர்வு எழுதுவார்கள்” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

AmitShah exam crpf
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe