Advertisment

‘கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்’ - திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர்

cm stalin launched the all-day alms program at temples

Advertisment

தமிழக முதல்வர் ஸ்டாலின் மேலும் மூன்று கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத்தொடங்கி வைத்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டங்களைத்தொடங்கி வைத்து வருகிறார். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ராமேஸ்வரம் ராமநாதசுவாமிஆலயம், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத்தொடங்கி வைத்துள்ளார்.

ஏற்கனவே இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கி வரும் நிலையில், தற்போது மேலும் 3 கோயில்களில் அத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். மேலும், 854 கோயில்களில் ஒரு வேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

temple
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe